/* */

குமரியில் ஒரே நாளில் 102 கனரக வாகனங்கள் மற்றும் 2108 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு

குமரியில் வாகன சோதனையில் ஒரே நாளில் 102 கனரக வாகனங்கள் மற்றும் 2108 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் ஒரே நாளில் 102 கனரக வாகனங்கள் மற்றும் 2108 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
X

வாகனச் சோதனையில் போலீசார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்துகள் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது

மேலும் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வதால் விபத்துகள் அதிகரிப்பதாகவும் தெரியவந்தது.

இதே போன்று அதி வேகத்துடன் செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் கனிமவளம் கடத்தலில் ஈடுபடும் வாகனமாக இருப்பதாகவும் ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அதிக பாரம் மற்றும் அதி வேகத்துடன் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்கை பகுதிகளிலும் போலீசாரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

அதன்படி நடைபெற்ற வாகன சோதனையில் ஒரே நாளில் அதிக பாரம் மற்றும் அதிவேகத்துடன் வந்த 102 கனரக வாகனங்கள் மற்றும் தலைக்கவசம் இல்லாமலும் உரிய ஆவணங்களும் இல்லாமலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஒட்டிய 2108 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

குமரியில் கடந்த ஒரு மாதத்தில் 2300 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மீதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

Updated On: 31 July 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!