/* */

குமரியில் படகு சேவை திடீர் நிறுத்தம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குமரியில் சுற்றுலா சொகுசு படகு போக்குவரத்து திடீரென நிறுத்தபட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

HIGHLIGHTS

குமரியில் படகு சேவை திடீர் நிறுத்தம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
X

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளது. இவற்றை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்காக, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா சொகுசு படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

அதன்படி பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன, இதில் பொதிகை படகு பழுதடைந்து உள்ளதால், இன்று காலை 8 மணி முதல் குகன், விவேகானந்தா ஆகிய 2 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. பிற்பகலில் விவேகானந்தர் படகும் பழுதடைந்ததால் அதுவும் நிறுத்தப்பட்டது. இதனால் குகன் என்ற ஒரு படகு மட்டும் விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்து கரைக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் கடல் நீர்மட்டம் திடீர் என்று தாழ்வானது. இதனை தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது, மேலும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளும் படகு மூலம் அவசரம் அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Updated On: 19 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  3. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  4. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  6. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  7. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  8. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...
  9. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்