/* */

குமரியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 340 கிலோ புகையிலை மற்றும் குட்கா பறிமுதல்

குமரியில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 340 கிலோ புகையிலை மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 340 கிலோ புகையிலை மற்றும் குட்கா பறிமுதல்
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கஞ்சா, குட்கா, போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இது தொடர்பாக அனைத்து காவல்நிலைய போலீசாரும் சோதனை மேற்கொள்ளவும், தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சார்லஸ், காவல் ஆளினர்கள் சகிதம் முப்பந்தல் கண்ணுபொத்தை ரயில்வே கேட் அருகில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடிக்க முயலும்போது ஒருவர் தப்பினார். மற்ற ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் ஆவரைகுளம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(40) மற்றும் வள்ளியூர் பகுதியை சேர்ந்த சந்திரபால் (45) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்த போது அவர்கள் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 340 கிலோ குட்கா, புகையிலை மற்றும் ரூபாய் 1,05,600 வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து குட்கா, புகையிலை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.

Updated On: 21 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  4. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  5. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  7. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  9. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  10. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்