/* */

காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் நடந்த மரம் நடும் விழா

காஞ்சிபுரம் தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிய மரக் கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் நடந்த மரம் நடும் விழா
X

காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் அமைந்துள்ள சிருஷ்டி சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டினர்.

தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிய மரக்கன்றுகளினை பள்ளி வளாகத்தில் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் அமைந்துள்ளது சிருஷ்டி சி.பி.எஸ்.இ. பள்ளி. இப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் , பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சமூக அமைப்பினர் என பலர் இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விளக்கப்பட்டு அதற்கு முக்கிய காரணம் மரம் வளர்ப்பது என்பதை உணர்த்தும் வகையில் பள்ளி மாணவர்களை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபடுத்தி அவர்களை ஆர்வப்படுத்தினர்.


இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை தங்கள் நினைவாக நட்டு பள்ளிக்கல்வி வரை பராமரிப்பது என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் தங்களது சொந்த செலவில் மரக்கன்றுகளை எடுத்து வந்து பள்ளி வளாகத்தில் தனது குழந்தைகளுக்கும் மரம் வளர்ப்போம் ஆர்வத்தை தூண்டியது குறிப்பிடத்தக்கது.

சாலை விரிவாக்கத்திற்காக சாலை ஓர மரங்கள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை வரும் மர கன்றுகள் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இனிவரும் காலங்களில் கடும் கோடை வெப்பத்தை சமாளிக்க மரம் வளர்ப்பது அதிக அளவில் வெப்பத்தை கட்டுப்படுத்தும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தி மழைநீர் சேகரிப்பு போல் மரம் வளர்ப்பை பெரிய அளவில் கொண்டு பொது மக்களிடம் சேர்க்க வேண்டும் எனவும் இந்நிகழ்ச்சியில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் பரணிதரன் , பசுமை இயக்க ஆர்வலர்கள் முருகேசன் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Updated On: 8 July 2023 8:52 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  7. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  8. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்