காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பிரியாணி வழங்கி கொண்டாட்டம்
காஞ்சிபுரம் நகரில் பல இடங்களில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா திமுகவினரால் பிரியாணி வழங்கி கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் நிகழ்வினையொட்டி காஞ்சிபுரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் பொதுமக்களுக்கு அசைவ சிறப்பு விருந்தினை சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர்,எழிலரசன் வழங்கினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் மார்ச் ஒன்றாம் தேதி தமிழக முழுவதும் தி.மு.க.வினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாம், பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள் மற்றும் நாள் தோறும் அறுசுவை சைவ, அசைவ உணவு என தமிழக முழுவதும் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினருக்கு கூறி இருந்தார். இதனையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில் கடந்த 20 நாட்களாக காஞ்சிபுரம் மாநகர தி.மு.க. சார்பில் நாள்தோறும் பகல் 12மணியளவில், பொதுமக்களுக்கு சைவ, அசைவ அறுசுவை இனிப்புகள் உடன் உணவு வழங்கப்பட்டு வருகிறது.இது மட்டும் இல்லாமல் பொதுமக்களுக்கு இலவச வேட்டி , சேலை , தையல் இயந்திரம் உள்ளிட்ட நல திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் 28 வது வட்ட மாமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் சார்பில், நல திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு அறுசுவை பிரியாணியினையும் மாவட்ட செயலாளர் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதேபோல் காஞ்சிபுரம் மாநகராட்சி பணிக்குழு தலைவரும் முப்பதாவது வார்டு மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புடன் கூடிய அசைவ உணவினை சட்டமன்ற உறுப்பினர்களால் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் , மாநகர தி.மு.க. செயலாளர் தமிழ்ச்செல்வன், சன்பிராண்ட் ஆறுமுகம் , பகுதி கழக செயலாளர்கள் சந்துரு , திலகர், தசரதன், மாமன்ற உறுப்பினர்கள் கமலக்கண்ணன், சுரேஷ், குமரன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் செவிலிமேடு பகுதியில் ஆதி திராவிட நல பிரிவு தலைவர் செவிலிமேடு மோகன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற விழாவில் 10 திருமண ஜோடிகளுக்கு சமத்துவ திருமணத்தினை சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் , எழிலரசன் ஆகியோர் நடத்தி வைத்தனர்.