/* */

கொட்டும் மழையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் : ஊழியர்களுக்கு குவியுது பாராட்டு

காஞ்சிபுரத்தில் இன்று கன மழை பெய்து வரும் நிலையிலும் 250 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஊழியர்களின் சிறப்பான பணிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

HIGHLIGHTS

கொட்டும் மழையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் : ஊழியர்களுக்கு குவியுது பாராட்டு
X


கோப்பு படம் 

தமிழகத்தில் கொரோனா நோயை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்படுவது மட்டுமில்லாமல் அவ்வப்போது தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதுவரை 7 முகாம்கள் நடைபெற்றுள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியினை 7 லட்சத்து 15 ஆயிரத்து 617 பேரும் இரண்டாவது தவணையைப் 2 லட்சத்து 99 ஆயிரத்து 768 நபர்களும் செலுத்திக் கொண்டு உள்ளனர்.

வாரம் ஒரு முறை சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் நடைபெற்று வந்த முகாம்கள் தற்போது வாரம் இருமுறை சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.

மேலும் இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 485 நபர்களுக்கான சிறப்பு முகாம் இன்று மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. அப்போது காலை 10 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கூட காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் என அறிவித்த சிறப்பு முகாம்கள் கொட்டும் மழையிலும் நடைபெற்று வருகிறது.

குறைந்த அளவே நபர்கள் வந்தாலும் ஊழியர்கள் சிறப்பு முகாமில் காலை 7 மணி முதலே முகாம் நடைபெறும் இடங்களில் மழையில் சாரலிலும் பொதுமக்கள் வருவார்கள் என காத்திருக்கும் இவர்களது செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.

Updated On: 18 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...