பள்ளி கல்லூரி அளவில் போதை பொருட்கள் தடுப்பு குழு: ஏடிஜிபி சங்கர்

காஞ்சிபுரம் மண்டல காவல்துறை சார்ந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சார்ந்த 70 கல்லூரி, பள்ளிகளுடன் ஏடிஜிபி சங்கர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பள்ளி கல்லூரி அளவில் போதை பொருட்கள் தடுப்பு குழு: ஏடிஜிபி சங்கர்
X

காஞ்சிபுரம் காவல்துறை மண்டலம் சார்பில் பள்ளி கல்லூரிகளில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஏடிஜிபி சங்கர் தலைமையில் ஐஜி கண்ணன், டிஐஜி பகலவன், எஸ்பி சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் காவல்துறை மண்டலத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்களை 10 பேர் கொண்ட தடுப்பு குழு அமைக்கப்படும் என தமிழக கூடுதல் காவல்துறை இயக்குனர் சங்கர் ஐபிஎஸ் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.

சமீப காலமாகவே பள்ளி கல்லூரி மாணவர்கள் பல்வேறு போதை பொருட்களால் தங்கள் கல்வி மற்றும் இளமையை தொலைத்து அதில் மீள முடியாத அளவிற்கு அடிமையாகும் நிலைமை தற்போது உருவாகி இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் நிலவுகிறது.

இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் காவல்துறை பள்ளி கல்லூரிகளில் அதிக அளவில் விழிப்புணர்வு மேற்கொண்டு போதையில்லா தமிழகம் உருவாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.


அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் காவல்துறை மண்டலம் சார்பில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 70 பள்ளி கல்லூரி நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்தாலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் தமிழக கூடுதல் காவல் துறை இயக்குனர் சங்கர் ஐபிஎஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், டி ஐ ஜி பகலவன் , காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேபாஸ் கல்யாண் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் போதைப் பொருட்கள் வரும் நிலைகளை கண்டறிதல் , அதனை தடுக்க குழுக்கள் அமைத்தல் , அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க உதவும் மருத்துவமனைகள் குறித்த தகவல்கள், பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட தகவல்களை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பள்ளி, கல்லூரி அலுவலர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து கூடுதல் காவல் துறை இயக்குனர் சங்கர் பேசுகையில், போதைப் பழக்கங்களால் தற்போதைய இளைஞர்கள் அதிக அளவில் சீரழிவதை தடுக்க எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்லூரி நிர்வாகிகள் விரும்புகின்றனர் என்பதை கருத்து கூற விருப்பம் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் தொழிற்சாலை, கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் பயன் அதிக அளவில் இதனை பயன்படுத்துவதாகவும், அதைப் பார்க்கும் நமது மாணவர்கள், இளைஞர்களும் அதிக அளவில் இதை பயன்படுத்துவது பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்யும் போது காண முடிகிறது. எனவே அனைத்து கடைகளிலும் காவல்துறை கடுமையான சோதனை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் கட்டாயம் கண்ணில் தெரியும்படி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்கள் தெரிவிக்கையில் காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு குழு உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் போதை இல்லா காஞ்சிபுரம் மண்டலம் உருவாக்கப்படும்.

இக்குழுவில் கல்லூரி முதல்வர் தலைவராகவும் , பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ , மாணவியர்கள் என 10பேர் இடம் பெறுவர் என தெரிவித்தார்.

Updated On: 2023-03-20T12:20:53+05:30

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி