/* */

காஞ்சிபுரம் சிவ காஞ்சி காவல் நிலையத்தில் பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து..

காஞ்சிபுரம் சிவ காஞ்சி காவல் நிலைய வளாகத்தில் உள்ள விநாயகர் கோயில் மண்டல பூஜை நிறைவு நிகழ்வை முன்னிட்டு பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் சிவ காஞ்சி காவல் நிலையத்தில் பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து..
X

சிவகாஞ்சி  காவல்நிலைய வளாகத்தில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் உணவு பரிமாறிய காவல்துறையினர்.

காஞ்சிபுரம் சங்கர மடம் எதிரே உள்ள தேரடி தெரு‌ பகுதியில் பெரிய காஞ்சிபுரம் பகுதிகளில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பணிக்காக சிவகாஞ்சி காவல் நிலையமானது 1930 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு கடந்த 2020 வரை செயல்பட்டு வந்தது. அந்த கட்டடம் பழுதடைந்து காணப்பட்ட நிலையில் புதிய கட்டிடம் கட்ட தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

புதிய கட்டிடம் கட்ட ரூபாய் 1.2 கோடி ரூபாய் நிதியானது ஒதுக்கப்பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு அந்த வளாகத்திலிருந்த விநாயகர் மற்றும் புத்தர் சிலைகளானது ஆகம விதிகளின் படி பூஜைகள் செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கியது.

அதுவரை தற்காலிகமாக அந்தக் காவல் நிலையம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஊர் காவல்துறை மாவட்ட தலைமை அலுவலகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் புதிய கட்டிட பணிகள்‌ முற்றிலும் முடியுற்று கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதியன்று சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கான புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் ‌மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து டிஐஜி சத்தியபிரியா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். பின்னர், காவல் நிலைய வளாகத்தில் இருந்த விநாயக் திருக்கோயிலை கட்ட காவல் ஆய்வாளர்‌ விநாயகம் ஏற்பாட்டில் பணிகள் நடைபெற்று. பணிகள் முடிவடைந்தத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம்‌ 16 ஆம் தேதியன்று கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து தினந்தோறும் மாலை வேளைகளில் மண்டல அபிஷேகமானது நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று 48 ஆவது நாள் மண்டல அபிஷேக பூர்த்தி விழாவானது நடைபெற்றது. இதில் வரசிக்தி விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.

மண்டல பூஜை நிறைவு விழாவுக்காக அந்தப் பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அஅழைக்கபட்டனர். அனைவரும் சமம் என்பதை பறைசாற்றும் வகையில் வளாகத்தில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் 150 பேருக்கு மேல் வந்து உணவு அருந்தியது காண்போர் அனைவரையம் ஆனந்தபடுத்தியது. அவர்களுக்கு காவல் துறையினரே உணவு பரிமாறினர்.

காவல் நிலையமே வர தயங்கும் ஒரு சிலரும் சகஜமாக வந்திருந்து உணவருந்திய காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியூட்டியது. தொடர்ச்சியாக மூன்று மாதத்துக்கும் மேலாக தொடர் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு இன்றைய நிகழ்ச்சியில், அனைவருக்கும் உணவளித்தது மன நிறைவை அளித்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும், காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள புத்தர் சிலை மிகவும் பழமையானது ஆகும், தமிழக காவல்துறை தலைவராக தேவாரம் இருந்தபோது அவரது முன்னிலையில் காவல் நிலைய வளாகத்தில் இடதுபுறம் மண்டபம் அமைத்து புத்தர் சிலையை திறந்து வைத்து குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 Nov 2022 5:20 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...