/* */

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூர் பகுதியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் வடமேற்கு பருவமழை துவங்கி கடந்த 30 நிமிடங்களாக கனமழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூர் பகுதியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

காஞ்சிபுரத்தில் சுமார் 30 நிமிடமாக பெய்து வரும் மழை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் செங்கல்பட்டு கடலூர் தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்கள் காலை முதலே கனமழை பெய்ய தொடங்கியதால் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு நடவடிக்கையாக விடுமுறை அளித்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், தற்போது 30 நிமிடங்களாக காஞ்சிபுரம் , வாலாஜாபாத் , உத்தரமேரூர், பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்யத் துவங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த கனமழையால் 78 பொதுப்பணித்துறை ஏரிகள் நெருங்கியுள்ள நிலையில், தற்போது கனமழையால் மீண்டும் பல ஏரிகள் நிரம்பத் துவங்கும் என்பதால் தற்போதைய ரபி பருவ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 29 Oct 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...