/* */

ரூ.7 லட்சம் மதிப்பில் நெல் பாதுகாப்பு கிடங்குடன் கொள்முதல் நிலையம் திறப்பு

காஞ்சிபுரம் அருகே ரூ.7 லட்சம் மதிப்பில் நெல் பாதுகாப்பு கிடங்குடன் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

ரூ.7 லட்சம் மதிப்பில் நெல் பாதுகாப்பு கிடங்குடன் கொள்முதல் நிலையம் திறப்பு
X

மேல்கதிர்பூர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்  பணி துவங்கியது.

மேல்கதிர்பூர் கிராம ஊராட்சியில் விவசாயிகளின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை , பங்களிப்பு என சுமார் ஏழு லட்சத்தில் அரசு நெல் கொள்முதல் நிலைய கிடங்கு அமைத்து இன்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

விவசாயிகள் மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் , கடந்த பருவத்தில் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை துவங்கி உள்ளது.

அவ்வகையில் கடந்த வாரம் முதல் அறுவடை செய்த நெல்களை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து கூடுதல் வருவாய் விவசாயிகள் பெற்று வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த மேல்கதிர்பூர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கீழ்க்கதிர்பூர், விப்பேடு, நரப்பாக்கம், குண்டு குளம் உள்ளிட்ட 8 கிராமங்களை உள்ளடக்கி அரசு நேரடி மேற்கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 25,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதில் கிடைக்கப்பெற்ற ஊக்கத்தொகை மற்றும் கிராம விவசாயிகளின் பங்களிப்பு என ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் 7.5 லட்சம் மதிப்பீட்டின் கொள்முதல் செய்யும் நெல்களை பாதுகாக்கும் வகையில் குடோன் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா மற்றும் இந்த பருவத்திற்கான அரசு நேரடி மேல் கொள்முதல் நிலையம் திறப்பு என இரு விழாக்கள் கிராம ஊராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.

இதில் ஏராளமான கிராம விவசாயிகள் கலந்து கொண்டு கொள்முதலை துவக்கி, அரசு விதிகளின்படி விவசாயிகள் இதனை பயன்படலாம் என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடைக்கப்பெற்ற ஊக்கத் தொகையை எவ்வித செலவிற்கும் பயன்படுத்தாமல், விவசாயிகள் மற்றும் அரசுக்கு எந்த வித வீண் சேதம் இன்றி பாதுகாக்கும் வகையில் இது அமைக்கப்பட்டதாகவும் இதற்கு விவசாயிகள் பெறும் துணை புரிந்தவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Updated On: 22 March 2024 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  2. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  3. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  7. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  8. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  9. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி