/* */

ஆட்டோ நகர் : தொழிற்பேட்டை நுழைவு வாயில் வளைவு திறப்பு

காஞ்சிபுரம் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் தொழிலாளர்கள் சங்க தொழிற்பேட்டை வளாகத்தில் நுழைவாயில் வளைவைஎம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர்

HIGHLIGHTS

ஆட்டோ நகர் : தொழிற்பேட்டை நுழைவு வாயில் வளைவு திறப்பு
X

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழம்பி பகுதியில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காஞ்சிபுரம் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் தொழிலாளர் நல சங்கம் சார்பில் ஆட்டோ நகர் என உருவாக்கப்பட்டு அப்பகுதியில் வாகன பழுது பார்த்தல் அனைத்துப் பிரிவுகளுடன் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது

இதில் 360 பேர் உறுப்பினர்களாக இருந்து கொண்டு 250க்கும் மேற்பட்ட கடைகளில் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொழிற்பேட்டை நுழைவுவாயில் தொழிலாளர்கள் உழைப்பை போற்றும் வகையில் உருவச் சிலையுடன் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் நுழைவுவாயில் ஆர்ச் அமைக்கப்பட்டது.

இதனை இன்று திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் மற்றும் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் ஆகியோர் இணைந்து திறந்து வைத்து தொழிலாளர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

இதில் பேசிய க.சுந்தர் , தொழிலாளர் நலன் கருதி கடந்த திமுக ஆட்சியில் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது. தற்போது இதன் நுழைவு வாயில் அமைப்பினை திறக்க வந்துள்ளோம். தொழிலாளருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் பி எம் குமார் , காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார் துணை தலைவர் இளமது, மோட்டார் வாகன பழுது பார்ப்போர் தொழிலாளர் நல சங்க தலைவர் மூர்த்தி செயலாளர் கௌரிசங்கர் பொருளாளர் ரவி உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  2. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  4. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  5. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  6. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  7. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  10. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்