/* */

காஞ்சிபுரம்: மருத்துவ கழிவுகளை திறந்தவெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை- ஆட்சியர் எச்சரிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை நீர்நிலைகள் , சாலையோரங்களில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: மருத்துவ கழிவுகளை திறந்தவெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை- ஆட்சியர் எச்சரிக்கை!
X

திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மருத்துவக் கழிவுகளை முறையாக கையாள அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு ஏற்கனவே பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.

இருப்பினும், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மருத்துவ கழிவுகள் சாலைகள், ஆற்றங்கரைகள், நீர் நிலைகள் மற்றும் ஒதுங்கிய பகுதிகளில் சட்ட விரோதமாக கொட்டுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன.

தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தொற்று சூழலில், மருத்துவக்கழிவுகளை முறையில்லாமல் திறந்த வெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, அனைத்து மருத்துவமனைகள், கோவிட்-19 பராமரிப்பு மையங்கள், மற்றும் தனிமை படுத்தப்பட்ட முகாம்கள், மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து அந்தந்த பகுதிகளில் மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதை தவிர்க்க உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளை பின்பற்றாமல் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை செய்கிறது என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

#Kanchipuram #StrictAction #medical #waste #dumped #roadside #Collector #warns #காஞ்சிபுரம் #மருத்துவகழிவுகளை #சாலையோரம் #கொட்டினால் #கடும்நடவடிக்கை #ஆட்சியர் #எச்சரிக்கை #tamilnadu #instanews

Updated On: 11 Jun 2021 6:33 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!