/* */

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் திருக்கோயில் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வளாகத்தில் 5 உண்டியல் பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் திருக்கோயில் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்
X

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியுள்ளது.

காஞ்சிபுரம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற குமரக்கோட்டம் என அழைக்கப்படும் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கச்சியப்பரால் கந்த புராணம் அரங்கேறிய திருதலமாக இன்று வரை சிறப்புடன் விளங்கி வருகிறது.

இத்திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் முருகருக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுவதும், சஷ்டி காலத்தில் ஏராளமானோர் விரதம் இருந்து திருக்கோயிலை வலம் வருவதும் வழக்கம்.

அவ்வகையில் பக்தர்கள் திருக்கோயிலுக்கு காணிக்கை செலுத்தும் வகையில் திருக்கோயில் வளாகத்தில் ஐந்து உண்டியல்கள் இந்து சமய அறநிலைத்துறை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் உண்டியல் திறக்கபட்டு எண்ணப்பட்ட நிலையில், இன்று திருக்கோயில் வளாகத்தில் 5 உண்டியல்களை செயல் அலுவலர் தியாகராஜன், ஆய்வாளர் கிருத்திகா, செயல் அலுவலர் சுரேஷ் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கல்லூரி மாணவர்கள் மற்றும் இறை பணி குழுவினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் பங்கு பெற்று காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது.

உண்டியல் என்னும் காட்சிகளை கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

பக்தர்கள் வெள்ளி, பித்தளை உள்ளிட்ட ஆகிய சிறிய உருவபொருட்கள், 3அடி வேல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

இன்று மாலை வரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் எனவும், இந்து சமய அறநிலையத்துறை விதிகளுக்கு உட்பட்டு இப்படி நடைபெறும். இறுதி நிகழ்வு வரை வீடியோ ஓளிப்பதிவு நடைபெறும் என செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Aug 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...