காஞ்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல், முதல் நாள் 32 பேர் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, முதல் நாளான இன்று 32 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காஞ்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல், முதல் நாள் 32 பேர் வேட்பு மனு தாக்கல்
X

தேர்தல் அலுவலர் அறை என ஸ்டிக்கர் ஒட்டும் ஊழியர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி 3ஓன்றியங்களிலும் , 2ஓன்றியங்களில் அக்டோபர் 9ம்தேதியும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை முதல் துவங்கியுள்ளது. காலை முதல் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் வந்து தேர்தல் குறித்த தகவல்களை பெற்றும் மனுக்களை வாங்கி சென்றனர்.

முதல் நாள் முடிவில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2பேரும் , கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 30பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஒரு வரும் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் .

கிராம ஊராட்சி வார்டு களைப் பொருத்தவரை , காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஐந்து பேரும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும் , உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6 வேட்பு மனுக்களும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 17 வேட்பு மனுக்களும், குன்றத்தூர் ஊராட்சி ஒரு வேட்புமனுக்கள் என மொத்தம் 30 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை இதேபோல் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு 5 ஒன்றியங்களிலும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Updated On: 15 Sep 2021 2:15 PM GMT

Related News