/* */

77வது சுதந்திர தின விழா: காஞ்சியில் கோலாகலம்..

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் தேசியக் கொடியை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

77வது சுதந்திர தின விழா: காஞ்சியில் கோலாகலம்..
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 77வது சுதந்திரத்தில் நாளை ஒட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்து ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் எஸ்.பி சுதாகர் ஆகியோர் மரியாதை செலுத்திய போது.

77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

பல்வேறு துறைகளின் கீழ் 60 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே,28லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாட்டின் 77-வது சுதந்திர தின விழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி விட்டு, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் முவர்ண பலூனையும், வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மேகன் பறக்கவிட்டார். அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 60 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார்.

இதேபோன்று பல்வேறு துறைகளில் பணியாற்றிய அரசு அலுவலர் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு கொடியேற்றுதல், கலை நிகழ்ச்சி போன்றவற்றை கண்டு களித்தனர்

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் பொன்னி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Aug 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  4. நாமக்கல்
    முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி பயில இட ஒதுக்கீடு
  5. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  6. பொன்னேரி
    எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு...
  7. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
  9. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி