/* */

காஞ்சிபுரத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்: எம்எல்ஏ எழிலரசன் வழங்கல்

தமிழக‌அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில்  மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்: எம்எல்ஏ எழிலரசன் வழங்கல்
X

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதி வண்டிகளை பள்ளி மாணவர்களுக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் வழங்கினார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அவ்வகையில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கல்வி கற்கவும் , உடல்நிலை மேம்பட ஏதுவாக விலையில்லா மிதிவண்டி வழங்கப்படுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு விளையில்லா மிதி வண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் வழங்கினார்.

அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் 456 மாணவர்களுக்கும் தாமல்வார் தெரு பகுதியில் அமைந்துள்ள மரியா அக்ஸிலம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 159 மாணவிகளுக்கும் , எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 292 மாணவிகளுக்கு என மொத்தம் 907 விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இவ்விழாவில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் , மாமன்ற உறுப்பினர்கள் சந்துரு , சுரேஷ் , கமலக்கண்ணன் , இலக்கியாசுகுமார் , நிர்மலா மற்றும் திமுக நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் , பகுதி செயலாளர் திலகர் , தசரதன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Aug 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!