சிறப்பு காய்ச்சல் முகாம் எங்கெல்லாம் நடைபெற்றது என தெரியாமல் குழப்பம்?

Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மட்டுமல்லாமல் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற காத்துக் கிடக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிறப்பு காய்ச்சல் முகாம் எங்கெல்லாம் நடைபெற்றது என தெரியாமல் குழப்பம்?
X

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரண்டாவது நாளாக குவிந்த காய்ச்சல் நோயாளிகள்.

Kanchipuram News in Tamil -தமிழகத்தில் ஆண்டுதோறும் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு காச்சல் பாதிப்பு பரவலாக இருக்கும். கடந்த ஒரு வார காலமாகவே அனைத்து வயதுடைய தரப்பினரும் காய்ச்சல் காரணமாக கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் வடகிழக்கு பருவமழை முடியும் வரை சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் காய்ச்சல், சளி, தலைவலி, இருமல் பாதிப்பு உள்ளவர்கள் முகாம்களில் வந்து சிகிச்சை பெறலாம் எனவும், ஓரே பகுதியில் 3 பேருக்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதியில் சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம் எங்கெல்லாம் நடைபெறுகிறது என்பதை மாவட்ட நிர்வாகம் முறையாக சுகாதார துறை மூலம் தெரிவிக்கவில்லை.

இதனால் காய்ச்சலுக்கு உள்ளானார்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையை அதிக அளவில் இன்றும் நாடி தங்களுக்கு காய்ச்சல் குறித்த சிகிச்சை பெற்று திரும்பி வருகின்றனர்.

இதுகுறித்து எந்த செய்தி குறிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொண்டு அருகிலேயே சிகிச்சை பெற முடியாமல் போன நிலை ஏற்பட்டது.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-22T16:05:55+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...