/* */

காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா கோலாகலம்

காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயத்தில் அதிகாலையிலேயே குவிந்த மக்கள் நீண்ட வரிசையில் நின்று நெய்தீபம் ஏற்றி ஸ்ரீகர்ணகி சமேத ஸ்ரீசித்திர குப்தரை வணங்கினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா கோலாகலம்
X

 காஞ்சிபுரம் சித்திரகுப்தர் ஆலயத்தில், சிறப்பு மலர் அலங்காரத்தில் ஸ்ரீ.கர்ணகி சமேத ஸ்ரீ சித்திரகுப்தர்.

காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள இந்துக் கோயில்களில் சித்ரகுப்தர் ஆலயமும் ஒன்றாகும். இக்கோயில் இந்து மதக் கடவுள் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இது ஒரு அரிதான கோயிலாகும். சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது. சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்று, பவுர்ணமி அன்று நகர்வலம் வருகிறார். இதனையொட்டி இன்று காலை சிறப்பு ஹோமம் மேற்கொள்ள பட்டு சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவினை ஒட்டி அதிகாரிகளை பொதுமக்கள் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆலயத்திலுள்ள சித்திரகுப்தர் சிலைக்கு முன்பாக நெய் விளக்கு தீபமேற்றி, பெண்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தியகராஜன் வழிகாட்டுதல்படி விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வேலரசு, கோயில் குருக்கள் மேற்கொண்டு வருகின்றனர். விழாவையொட்டி காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபம் ஏற்றும் பகுதியில் சிறு தீ விபத்து நிகழ்ந்தது. இதனால் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் வழிகாட்டுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 16 April 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  4. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  6. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  9. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :