/* */

அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனுமதி இன்றி பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு
X

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பகுதியில் மேடை அமைக்கப்பட்டு ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வினை ஒட்டி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காஞ்சி பன்னீர்செல்வம் பிளக்ஸ் பேனர் அமைத்திருந்தார். மேலும் சாலை நடைபாதையில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அறப்போர் இயக்கம் சார்பில் அரசு அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டு இருப்பதாக சாலைகளை தோண்டி கொடிக்கம்பம் நடபட்டு பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக வாட்ஸ் அப்பில் பதிவிடப்பட்டது அந்த அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டு இது தொடர்பாக காஞ்சி பன்னீர்செல்வம் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது..

Updated On: 5 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...