/* */

"வீடு தேடி வரும் வாக்கு சீட்டு" -கலெக்டர்

வீடு தேடி வரும் வாக்கு சீட்டு -கலெக்டர்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளில் மொத்தம் 2101 பேர் அஞ்சல் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 28,30 ஆகிய தேதிகளில் அவர்களது வீடுகளுக்கே இக்குழுக்கள் சென்று அஞ்சல் வாக்குகளை வழங்கி எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதையும் விளக்கி கூறுவார்கள்.

இக்குழுவில் இரு வாக்குப்பதிவு அலுவலர்கள்,ஒரு பார்வையாளர், ஒரு வீடியோ கிராபர் மற்றும் காவலர் ஆகியோர் இருப்பார்கள். இதற்கென மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் 28,30 ஆகிய தேதிகளில் வாக்களிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் மறுநாள் 31 அன்றும் வாய்ப்பு அளிக்கப்படும்.

அன்றைய தினமும் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டால் இறுதி வாய்ப்பாக ஏப்ரல் 1 ஆம் தேதி வாக்களிக்கலாம். வாக்குப்பதிவுகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். அஞ்சல் வாக்குப்பதிவு தொடர்பான விபரங்களை அரசியல் கட்சியினர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வேட்பாளர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என கூறினார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார்.

Updated On: 26 March 2021 1:34 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  2. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  3. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  4. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!