/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 4 ஆவது நாளாக பகுதி சபை கூட்டம்..

Kanchipuram Corporation -காஞ்சிபுரம் மாநகாரட்சியில் 4 ஆவது நாளாக 9 வார்டுக்குள்பட்ட பகுதிகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 4 ஆவது நாளாக பகுதி சபை கூட்டம்..
X

காஞ்சிபுரம் மாநகராட்சி 32 ஆவது வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினர் சாந்தி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற பகுதி சபை கூட்டம்.

Kanchipuram Corporation -உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பகுதி சபை கூட்டங்களும், கிராம ஊராட்சி பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டங்களும் நடைபெற்றது. இதில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தூய்மை பணியாளர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சிகளிலும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

சில இடங்களில் பொதுமக்களுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததால் அனைத்து பகுதிகளிலும் பகுதி சபை கூட்டங்கள் நடத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, சில இடங்களில் நான்காவது நாளாக இன்று பகுதி சபை கூட்டங்கள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு மூலம் பகுதி சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவுறுத்தி இருந்தார். அந்த வகையில் முதல்நாள் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் 18 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தனது ஒன்பதாவது வார்டு பகுதியில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில், 2 ஆவது நாளாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் 11 வார்டுகளிலும், மூன்றாவது நாள் 13 வார்டு பகுதிகளில் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையிலும் பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நான்காவது நாளாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில் இன்று பகுதி சபை கூட்டங்கள் நடைபெற்றது. 32 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மண்டல குழு தலைவரும், மாமன்ற உறுப்பினருமான சாந்தி சீனுவாசன் தலைமையில் பகுதி சபா கூட்டம் கோட்ராம்பாளையம், அஷ்டபுஜம் திருக்கோயில் ஏ கே டி தங்கவேல் முதலியார் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் பொதுமக்கள் பலர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்தனர்.

கூட்டத்தின்போது, சுகாதாரமான குடிநீர், மழைநீர் தேங்காத வண்ணம் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், தெருவிளக்கு வசதி, பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள் கால்நடைகளை முறைப்படி அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர் கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மூர்த்தி, திமுக நிர்வாகிகள் உமாபதி மற்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 Nov 2022 10:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!