/* */

9 டன் ரேஷன் அரிசி கடத்தல்: தேசிய நெடுஞ்சாலையில் விரட்டி பிடித்த ஆர்டிஓ

மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசி பதுக்கி இருப்பதாகவும் , அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார்.

HIGHLIGHTS

9 டன் ரேஷன் அரிசி கடத்தல்: தேசிய நெடுஞ்சாலையில் விரட்டி பிடித்த ஆர்டிஓ
X

கடத்திச் செல்லும் போது பிடிப்பட்ட ரேஷன் அரிசியுடன் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா குடிமை பொருள் கடத்தல் தடுப்பு காவல்  பிரிவு ஆய்வாளர் சசிகலா , குடிமை பொருள் வட்டாட்சியர் இந்துமதி மற்றும் வருவாய் ஆய்வாளர் பிரகாஷ்

தமிழக அரசு சார்பில் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனை பெரும் ஏழை எளிய மக்கள் அதை பயன்படுத்தாமல் கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை வாங்கும் தரகர்கள் வெளிமாநிலங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்வதை வழக்கமாக காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஒழிமுகமது பேட்டை , திம்ம சமுத்திரம் பகுதிகளில் இதனைப் பதுக்கி லாரிகளில் கடத்தும் நிலையை அறிந்த ஆட்சியர் கலைசெல்வி மோகன் அறிவுரையின் பேரில், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, இன்று சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் வழக்கம்போல் குடிமை பொருள் தாசில்தார் இந்துமதி, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் உடன் ஆர்டிஓ சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியாக வந்த லாரி நிற்காமல் சென்றதை தொடர்ந்து அதனை ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிபாக்கம் அருகே துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனுக்கு எடுத்து வந்த பார்த்த போது லாரியில் சுமார் 220 மூட்டைகள் இருப்பதும் அது 9 டன் எடை கொண்ட அரிசி எனவும் தெரியவந்தது.

இந் நிலையில் லாரி ஓட்டுனருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சசிகலா இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு தினங்களில் மட்டும் இதுவரை 18 டன் ரேஷன் அரிசி இப் பகுதிகளில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்ட எல்லையை லாரி தாண்டி சென்றாலும், விடாது துரத்தி பிடித்த வருவாய் கோட்டாட்சியர் ரம்யாவின் செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

Updated On: 14 July 2023 4:05 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...