/* */

ஆதம்பாக்கத்தில் நன்னடத்தை பிணை உறுதியை மீறிய ரவுடி மீண்டும் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் நன்னடத்தை பிணை உறுதியை மீறிய ரவுடியை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

ஆதம்பாக்கத்தில் நன்னடத்தை பிணை உறுதியை மீறிய ரவுடி மீண்டும் கைது
X

கைது செய்யப்பட்ட ரவுடி தினேஷ்.

சென்னை ஆதம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் தினேஷ் (எ) பம்பர் தினேஷ். இவர்2021 வருடம் நசம் (எ) அஜித்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்.

இந்த நிலையில் கடந்த 11.02.2022 அன்று புனித தோமையர் மலை காவல் மாவட்ட துணை ஆனணயாளரிடம் தான் திருந்தி வாழ போவதாகவும் ஒரு வருட காலத்திற்கு எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என்று நன்னடத்தை உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.

ஆனால் கடந்த 8.04.2022 அன்று ஆதம்பாக்கம் வள்ளலார் தெருவில் உள்ள ஒரு பாரில் வீராசாமி(53), என்பவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் 500 பறித்ததாக ஆதம்பாக்கம் காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி குற்ற செயல்களில் ஈடுபட்டு நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக செயல் முறை நடுவர் புனித தோமையர் மலை காவல் மாவட்ட துணை ஆணையாளர் பிரதீப் தினேஷிற்கு 110 விதியின் கீழ் நன்னடத்தையாக இருந்த நாட்கள் தவிர மீதம் உள்ள 309 நாட்களுக்கு பினணயில் வரமுடியாத தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் தினேஷ் (எ) பம்பர் தினேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 17 April 2022 12:36 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு