Begin typing your search above and press return to search.
சங்கராபுரம் அருகே தேர்தல் விதி மீறல்: அதிகாரிகள், போலீசார் அலட்சியம்
சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் கிராம வாக்குச்சாவடியில் தேர்தல் விதி மீறலை அதிகாரிகளும் போலீசாரும் அலட்சியம் காட்டினர்.
HIGHLIGHTS

தேர்தல் விதிகளை மீறி செயல்படும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.
கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ராமராஜபுரம் கிராமத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்பட தேர்தல் விதிகள் அமலில் இருந்தும் 100 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்கவில்லை. இதனை தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காவலர்கள் கண்டுகொள்ளாமல் பணி செய்து வந்தனர்.
தேர்தல் விதியினை செயல்படுத்தாமல் அலட்சியப் போக்கில் செயல்படும் காவலர்கள் மீதும், அங்கு பணி புரியும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?