/* */

கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், இன்று குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
X

கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 சிறப்பு விற்பனையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் இன்று குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து, வாடிக்கையாளர்களுக்கு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடலைகர், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவணம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூரைநாடு புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் எண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையனை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாக வந்துள்ளது.

இந்த ஆண்டு கோ-ஆப்டெக்கஸ் தீபாவளி 2021 பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.75.00 இலட்சம் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ ஆப்டெஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி, 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12வது மாத இரண்டு தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்துவதால், கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன் பெறலாம். தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவீதம் வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் வசதியும் உண்டு. எனவே, அனைத்து துறை ஊழியர்களும், பொது மக்களும் கைத்தறி துணி இரகங்களை வாங்கி பயன்பெறுவதோடு, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வு மேம்பட உதவிட வேண்டுமென தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக் முழுநிலை மண்டல மேலாளர் திரு.சௌ.சாதிக் அலி, வர்த்தக மேலாளர் திரு.ச.சா.கந்தசாமி, கள்ளக்குறிச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் திருமதி.இரா.மகாலட்சுமி மற்றும் விற்பனை நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  5. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  8. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  9. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  10. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...