/* */

பவானிசாகர் அணையின் இன்றைய (ஜன.23) நீர்மட்ட நிலவரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 412 கன அடியாக உள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய (ஜன.23) நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 412 கன அடியாக உள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து 644 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 412 கன அடியாக குறைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (ஜன.23) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 79.78 அடி ,

நீர் இருப்பு - 15.56 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 412 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 800 கன அடி ,

பாசனத்திற்காக அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 700 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 23 Jan 2024 2:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து