/* */

ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நாளை (செப்.29) ஆட்கள் தேர்வு

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நாளை (செப்.29) ஆட்கள் தேர்வு
X

ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள், டிரைவர்கள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான ஆட்கள் தேர்வு நாளை (செப்.29) வெள்ளிக்கிழமை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள டி.பி.ஹாலில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது.

மருத்துவ உதவியாளர் பணிக்கு கல்வி தகுதியாக பி.எஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி அல்லது உயிர் அறிவியல் பட்டப் படிப்புகளான பி.எஸ்சி விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், மைக்ரோ பயாலஜி, பயோடெக்னாலஜி, பிளாண்ட் பயாலஜி ஆகியவை படித்திருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம் மாத ஊதியமாக ரூ 15,435 ரூபாய் வழங்கப்படும். தேர்வு முறையாக எழுத்துத்தேர்வு, மருத்துவ நேர்முகம்- உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, நேர்முகத்தேர்வு பின்பற்றப்படும். நேர்முகத் தேர்வன்று 19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதேபோல், ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு. இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறையாக எழுத்துத்தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல், கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு நடத்தப்படும். மாத ஊதியம் ரூ.15,235 வழங்கப்படும். மேலும் விவரங்கள் அறிய 7397724813, 7397724829, 9154251540,7397724832 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும், நேர்முக தேர்விற்கு கலந்து கொள்ளும் அனைவரும் அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக அவசியம் கொண்டு வரவேண்டும். இத்தகவலை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Sep 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!