/* */

சித்தோடு அருகே லாரியில் 630 கிலோ மசாலா பொருட்கள் திருடிய 4 பேர் கைது

சித்தோடு அருகே லாரியில் 630 கிலோ மசாலா பொருட்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே லாரியில் 630 கிலோ மசாலா பொருட்கள் திருடிய 4 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 4 பேர்.

சித்தோடு அருகே லாரியில், மசாலா பொருட்கள் திருடிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, பெரிய சேமூர், ஈ.பி.பி., நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 61). லாரி ஆபீஸ் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் இருந்து லாரியில் பெங்களூருவுக்கு வழக்கமாக மசாலா பொருட்கள் கொண்டு செல்கின்றனர். கடந்த மாதம் 9-ம் தேதி மசாலா பாக்கெட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. சித்தோடு சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் சாப்பிட சென்றார். திரும்பி வந்த போது லாரியின் பின்புற தார்ப்பாய் கிழிக்கப்பட்டு, 630 கிலோ மசாலா பாக்கெட் திருட்டு போனது தெரிந்தது. அதன் மதிப்பு, 1.40 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து சித்தோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.இதில் மசாலா பொருட்களை திருடியது 4 பேர் என தெரிய வந்தது.மதுரை, நாகமலை பகுதியை சேர்ந்த பிரசாத் (37), உசிலம்பட்டி, ஏ.கொக்குளம் பகுதியை சேர்ந்த பாரதி (31), மதுரை, திருமங்கலம் பகுதியை சேர்ந்த ரூபன் (24), மதுரை, நாகமலை பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (49) ஆகியோரை, சித்தோடு போலீசார் கைது செய்தனர். பின்னர், நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். நெடுஞ்சாலைகளில் மெதுவாக செல்லும் லாரிகளில் ஏறி, பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டவர்கள் என்று தெரிவித்தனர். இதில் பிரசாத் மீது, 18 வழக்குகள், பாரதி மீது மூன்று வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 16 Jan 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?