/* */

அந்தியூர் வருவாய் வட்டத்தில் நாளை சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

அந்தியூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட 4 பகுதிகளில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

அந்தியூர் வருவாய் வட்டத்தில் நாளை சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்
X

அந்தியூர் வருவாய் வட்டாரத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம் என வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வருவாய் வட்டாரத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அந்தியூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு சௌடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்திலும், அத்தாணி உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு பேரூராட்சி திருமண மண்டபத்திலும், அம்மாபேட்டை உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு சனிசந்தை கொங்குதிருமகள் மண்டபத்திலும், பர்கூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு தாமரைக்கரையில் உள்ள சமுதாயக்கூடத்திலும் முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் இலவச வீடு , பட்டா பெயர் மாற்றம், சாதிசான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பிறப்பு, இறப்புச் சான்று, முதல் பட்டதாரி சான்று, குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல் போன்ற இனங்களுக்கு உரிய படிவத்தில் உரிய ஆதார ஆவணங்கள் இணைத்து தொடர்புடைய அலுவலரிடம் மனு செய்து சான்று பெறலாம். முகாமில் வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதால் பொதுமக்கள் முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்‌ ஏ.ஜி.வெங்கடாசலம் கேட்டுகொண்டுள்ளார்.

Updated On: 19 July 2022 6:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?