/* */

ஈரோட்டில் நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (16ம் தேதி) செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்ய உள்ளார்.

HIGHLIGHTS

ஈரோட்டில் நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
X

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (16ம் தேதி) செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்ய உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 7ம் தேதி ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு பிற.பெ.அக்ரஹாரம் மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், 2வது கட்டமாக நாளை (16ம் தேதி) செவ்வாய்க்கிழமை ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கொடுமுடி ஒத்தக்கடை பகுதியில் காலை 10.30 மணிக்கும், தொடர்ந்து தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தாராபுரம் காவல் நிலையம் அருகில் காலை 11.30 மணிக்கும் வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

முன்னதாக, கோபிசெட்டிபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் அருகில் இன்று (15ம் தேதி) திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கும், பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் இரவு 8.15 மணிக்கும் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

Updated On: 15 April 2024 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!