/* */

ஈரோட்டில் சமுதாய அளவிலான புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு

ஈரோடு மாவட்டத்தில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தினை துவக்கி வைத்து, புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிமணியன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

ஈரோட்டில் சமுதாய அளவிலான புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு
X

காலிங்கராயன்பாளையம் துணை சுகாதார நலவாழ்வு மைய வளாகத்தில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சு.முத்துசாமி.

ஈரோடு மாவட்டத்தில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தினை துவக்கி வைத்து, ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிமணியன் புதன்கிழமை (இன்று) திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம், காலிங்கராயன்பாளையம் துணை சுகாதார நிலைய வளாகத்தில், ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 52 லட்சம் பேருக்கு சமூக அளவிலான புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை துவக்கி வைத்து, ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது;- அருகில் உள்ள மருத்துவமனைகளில் மார்பக, கர்ப்பப்பை வாய் மற்றும் வாய் புற்றுநோயை பரிசோதிப்பதற்காக சுகாதார ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று மக்களை அழைப்பார்கள். 700 பெண் மருத்துவர்கள், 1300 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 1500 தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் உயிரைக் காப்பாற்ற சிகிச்சை உறுதி செய்யும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது மாவட்டத்தில் அதிகரித்து வரும் புற்றுநோயை தடுக்க, பலர் வேண்டுகோள் விடுத்தனர்.

1,2 நிலை புற்றுநோயை குணப்படுத்த முடியும். 3 மற்றும் 4 வது கட்டத்தை குணப்படுத்த முடியாது. எனவே, தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஜவுளி சாயமிடும் யூனிட்கள் அதிகம் உள்ள ஈரோடு, ரப்பர் பண்ணைகள் அதிகம் உள்ள கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இத்திட்டத்தை முதல்வர் அனுமதித்தார். இம்மாவட்டங்களில் புற்றுநோய் அதிகமாக இருக்கிறது.

டோக்கியோவில் உள்ள திட்ட மாதிரியில், இம்முகாம் ஏற்பாடு செய்யப்படும். நான்கு மாவட்டங்களில் உள்ள 1397 மருத்துவமனைகளில், முகாம்கள் நடத்தப்படும். ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 24 சுகாதாரத் துறை கட்டிடங்களை முதல்வர் விரைவில் திறந்து வைக்க உள்ளார்.


கோவையில் ரூ.12 கோடி மதிப்பிலான புற்றுநோய் கண்டறியும் இயந்திரம் இன்று மாலையும், சேலம் மருத்துவக் கல்லூரியில் நவம்பர் 30ம் தேதியும் திறக்கப்படுகிறது. 220 கோடி செலவில் மும்பையில் உள்ளது மாதிரி காஞ்சிபுரத்தில் விரைவில் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் திறக்கப்படும். புற்றுநோய் மற்றும் தொழுநோயை 2025 ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஜப்பானை போல், சமீபத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 38 மாவட்டங்களில், தினசரி 8 கிமீ நடைபாதைகள் திறக்கப்பட்டன. மேலும், மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில் பல சுகாதார திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். முன்னதாக, அவர் 3.63 கோடி மதிப்பிலான 12 புதிய கட்டிடங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது, எம்எல்ஏக்கள், ஈவிகேஎஸ் இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), டாக்டர் சி.கே.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), ஈரோடு மேயர் நாகரத்தினம், கூடுதல் ஆட்சியர் மணிஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய்குமார் மீனா, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இணை இயக்குநர்கள் கிருஷ்ணராஜ், செந்தில்குமார், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரகாஷ், மாவட்ட ஆரம்ப சுகாதாரத்துறை துணை இயக்குநர் சோமசுந்தரம் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Nov 2023 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது