/* */

காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு நாளை மறுநாள் முதல் தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் இரண்டாம் பருவ பாசனத்திற்காக நாளை மறுநாள் (டிச.25) முதல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு நாளை மறுநாள் முதல் தண்ணீர் திறப்பு
X

காலிங்கராயன் அணைக்கட்டு.

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் இரண்டாம் பருவ பாசனத்திற்காக நாளை மறுநாள் (டிச.25) முதல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் வருகிற 25ம் தேதி (நாளை மறுநாள்) முதல் 23.4.2024 வரையிலான காலத்தில் முதல் 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 150 கன அடி வீதமும், அடுத்த 60 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 450 கன அடி வீதமும், மீதமுள்ள 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் ஆக மொத்தம் 120 நாட்களுக்கு இரண்டாம் பருவ பாசனத்திற்கு 4 ஆயிரத்து 17.60 மில்லியன் கன அடிக்குமிகாமல் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் ஈரோடு மாவட்டம், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Dec 2023 1:00 AM GMT

Related News