/* */

ஈரோடு மாவட்டத்தில் 4 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

அந்தியூர் அருகே உள்ள வனச்சரகங்களில் வன விலங்குகள் மற்றும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 4 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அந்தியூர், பர்கூர், தட்டகரை, சென்னம்பட்டி என நான்கு பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் வன விலங்குகள் மற்றும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன் அடிப்படையில் உலக வனவிலங்குகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு புலிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதில் உலக வனவிலங்குகள் பாதுகாப்பு இயக்க தன்னார்வலர்கள் மற்றும் அந்தியூர், பர்கூர், தட்டகரை , சென்னம்பட்டி ஆகிய வனச்சரகங்களை சேர்ந்த வனத்துறையினர் கலந்து கொண்டனர்

இதுகுறித்து உலக வனவிலங்குகள் பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவிக்கையில், புலிகளின் கால்தடங்கள் மற்றும் எச்சங்கள் ஆகியவைகளைக் கொண்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், புலிகளின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தனர். இந்த கணக்கெடுக்கும் பணியில் ஒவ்வொரு வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வனச்சரகத்திலும் 3 நாட்கள் வீதம் கணக்கு எடுக்கும் பணி நடைபெறும் என தெரிவித்தனர். அப்பொழுது அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்தர சாமி பர்கூர் வனச்சரக அதிகாரி மணிகண்டன் தட்டகரை வனச்சரக அதிகாரி பழனிச்சாமி சென்னம்பட்டி வனச்சரக அதிகாரி செங்கோட்டையன் மற்றும் வனத்துறையினர் கணக்கெடுக்கும் பணியின் போது உடன் இருந்தனர்

Updated On: 2 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’