/* */

பவானி ஆற்றின் கொடிவேரி கிராம கரையொர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் கொடிவேரி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

பவானி ஆற்றின் கொடிவேரி கிராம கரையொர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

வருவாய் துறையினர் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அணையின் முழுக்கொள்ளளவு 105 அடி உள்ள நிலையில் நீர்வரத்தானது 100 அடி கொள்ளளவை நெருங்கவுள்ளதால், எந்த நேரத்திலும், பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என வருவாய்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஆற்றிக்கு கொண்டு செல்லவோ வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டி.என்.பாளையம் அடுத்த கொடிவேரி கிராமத்தில் கரையோரம் வாழும் மக்களுக்கு, கோபி கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அறிவுறுத்தலின்படி, தண்டூரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On: 16 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!