/* */

வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், வாக்காளர் விழிப்புணர்வு குறித்த ரங்கோலி கோலம், கும்மி பாட்டு மற்றும் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சிகள் நடந்தது.

HIGHLIGHTS

வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒவ்வொரு தேர்தலிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற 'வாக்களிப்போம், வாக்களிப்போம்" என்ற தலைப்பிலான கும்பி பாட்டு நிகழ்ச்சி, மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினர் வரைந்திருந்த '100 சதவீதம் வாக்களிப்போம்", 'வாக்காளர் உதவி எண்1950", "தேர்தல் நாள்", '18 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டு", 'பொறுப்புள்ள மக்களின் அடையாளம் வாக்களிப்பது", 'வாக்களிப்பது நமது கடமை", 'போடுங்க ஓட்டு, வாங்காதீங்க நோட்டு" மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ரங்கோலி கோலங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்சியினை தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சி.கதிரவன் பார்வையிட்டு, இத்தேர்தலை நேர்மையாகவும், அமைதியான முறையிலும் நடத்திட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். மேலும் ஈரோடு மாவட்டத்தை வாக்குப்பதிவில் 100 சதவீதம் எய்திட சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். வாக்காளர் விழிப்புணர்வு குறித்து, திருநங்கைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கு.சதீஸ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், உதவி மக்கள் திட்ட அலுவலர்கள் சாந்தா, சம்பத், செல்லம், பாஸ்கர், அன்பழகன் உட்பட மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 March 2021 1:04 PM GMT

Related News