/* */

சுதந்திர தின விழா : ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

சுதந்திர தின விழா : ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
X

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்பதால் இந்தியா முழுவதும் போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதன்படி ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழகத்திலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலும் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று ரயில்வே இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.

இதேபோல் ஈரோடு ரயில் நிலையம் முழுவதும் உள்ள நடைமேடைகளில் போலீசார் ஒவ்வொரு இடமாக சோதனை செய்தனர். மேலும் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரயில்களும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். சந்தேகப்படும்படியான பொருட்கள் ரயில் நிலையத்தில் இருந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் பயணிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

Updated On: 12 Aug 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?