/* */

75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் : ஈரோட்டில் கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை.

75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் : ஈரோட்டில் கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை.
X

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் தேசியக்கொடியை கலெக்டர் ஏற்றினார்.

நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் கொரோனா காலத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு வ.உ. சி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் காவல்துறையினர் மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், காவல்துறை, தீயணைப்புத் துறை, வருவாய் துறை, முன்னாள் படைவீரர், கொரானா தடுப்பு முன்களப்பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி புரிந்த 256 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இதனை தொடர்ந்து 3 சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். இதேபோன்று கொரோனா தொற்று பரவல் காரணமாகவும் வயது மூப்பு காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 80 சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் இல்லங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Updated On: 15 Aug 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  2. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  3. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  4. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  8. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  9. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...