/* */

ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 3வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
X
தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். இதற்காக நாளை நடைபெறவுள்ள டெண்டர் குறித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 480 நாள்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு 725 ரூபாயை ஏப்ரல் முதல் வழங்க வேண்டும்.

மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று முன்தினம் முதல் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2வது நாளாக நேற்று ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்கள் முன்பாகவும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, மாநகராட்சி மைய அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 3வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. பணியாளர் கள் யாரும் பணிக்கு வர வில்லை.

இதுகுறித்து ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி கூறியதாவது, 3வது நாளாக இன்று தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை காலை மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நாளை பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.அதன் முடிவை பொறுத்து பணியாளர்களின் போராட்ட மும் முடிவு செய்யப்படும். இவ்வாறு சின்னசாமி கூறினார்.

Updated On: 25 Jun 2023 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!