/* */

ஈரோடு: சித்தோடு வாசவி கல்லூரியில் நாளை ஆண்டு விழா

ஈரோடு அடுத்த சித்தோடு அருகே உள்ள வாசவி கல்லூரியில் நாளை (28ம் தேதி) 57வது ஆண்டு விழா நடக்கிறது.

HIGHLIGHTS

ஈரோடு: சித்தோடு வாசவி கல்லூரியில் நாளை ஆண்டு விழா
X

வாசவி கல்லூரியில் நாளை ஆண்டு விழா.

ஈரோடு அடுத்த சித்தோடு அருகே உள்ள வாசவி கல்லூரியில் நாளை (28ம் தேதி) 57வது ஆண்டு விழா நடக்கிறது.

ஈரோடு அடுத்த சித்தோடு அருகே உள்ள வாசவி கல்லூரியில் 57வது கல்லூரி ஆண்டு விழா நாளை (28ம் தேதி) வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவிற்கு கல்லூரி செயலாளர் ரோட்டரியன் சதாசிவம் தலைமை உரை நிகழ்த்த உள்ளார். ஈரோடு வித்யா சங்கம் - நிர்வாக உறுப்பினர் ரோட்டரியன் பாண்டுரங்கன் சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த விழாவில் கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ரூபா குணசீலன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பணி ஓய்வு பெறும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களை வாழ்த்த உள்ளார். கோவை ரூட்ஸ் குரூப் ஆப் கம்பெனியின் இயக்குநர் கவிதாசன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் இடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு செய்ய உள்ளார்.

விழாவில் 25 ஆண்டு பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு செய்தல், 43 மாணவ - மாணவியர்களுக்கு புரவலர் திட்ட உதவித்தொகை வழங்குதல், படிப்பு, விளையாட்டு, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டங்களில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியர்களுக்கும் சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட உள்ளது.

மேலும், இவ்விழாவில், கல்லூரி நிர்வாகத்தினர் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவ - மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Updated On: 27 March 2024 6:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!