/* */

ஈரோடு: சைக்கிள் ஓட்டி வந்து வேட்புமனு தாக்கல் செய்த தமாகா வேட்பாளர்

Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சைக்கிள் ஓட்டி வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

ஈரோடு: சைக்கிள் ஓட்டி வந்து வேட்புமனு தாக்கல் செய்த தமாகா வேட்பாளர்
X

Erode news- சைக்கிள் ஓட்டி வந்து வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார்.

Erode news, Erode news today- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சைக்கிள் ஓட்டி வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நடந்து வந்தது. திமுக சார்பில் போட்டியிடும் கே.இ.பிரகாஷ், அதிமுக சார்பில் போட்டியிடும் ஆற்றல் அசோக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஈஸ்வரன், சுயேட்சைகள் என நேற்று வரை மொத்தம் 25 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.


இந்த நிலையில், இன்று (27ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வரும்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரசை தேர்ந்த விஜயகுமார் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று விஜயகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளை ஓட்டி வந்து மனு கொடுக்க வந்தார். தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி, பாஜக தேர்தல் பொறுப்பாளர் வழக்கறிஞர் பழனிச்சாமி, பாஜக மாவட்ட தலைவர் வேதாந்தம், தமாகா பொதுசெயலாளர் விடியல் எஸ். சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 27 March 2024 11:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!