/* */

திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் விரைவில் பணிகள் துவக்கம்; அமைச்சர் சாமிநாதன் தகவல்

Erode news, Erode news today- திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை மைய பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் விரைவில் பணிகள் துவக்கம்; அமைச்சர் சாமிநாதன் தகவல்
X

Erode news, Erode news today- இலவச மருத்துவ முகாமினை அமைச்சர் சாமிநாதன்  தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிபிடாரியூர் ஊராட்சி கோவில்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா முன்னிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை (இன்று) துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இம்முகாமில், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஒவ்வொரு துறையிலும் பொதுமக்கள் பயன்பெறுகின்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக பொது மக்களின் நலனில் மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட முதலமைச்சர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக மக்களை தேடி மருத்துவ திட்டம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும்,மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 1999 ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருமுன் காப்போம் என்ற உன்னதமான திட்டத்தினை கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். அதன்படி கிராமப்புறங்களில் உள்ள பொது மக்களுக்கான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்ட வருகின்றன.

அதன்படி இன்றைய தினம் (2-ம் தேதி) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் திரு.சீனிவாசமூர்த்தி அவர்களின் நினைவாக (ஒளிரும் ஈரோடு,ரோட்டரி இதயம் காப்போம் பேருந்து, ரோட்டரி ஈரோடு சென்ட்ரல், ஈரோடு லோட்டஸ் மருத்துவமனை) சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிறப்புடன் நடைபெற்ற வருகிறது.

மேலும் இம்முகாமில் முழு உடல் பரிசோதனை, இரத்த கொதிப்பு, இருதய பரிசோதனை, ஈ.சி.ஜி, இருதய ஸ்கேன், எக்கோ, கர்ப்பப்பை பரிசோதனை, மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டிக் மற்றும் டயாலிசிஸ் செய்யப்படுகிறது.

பித்தப்பைக்கல் சிறுநீரக கல், மூட்டு மாற்று, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. அதேபோன்று பொது சுகாதாரத் துறையின் மக்களை தேடி மருத்துவ வாகனத்தில் உள்ள மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை அரசுடன் இணைந்து தனியார் துறையினரும் ஈடுபடுவது மிகவும் வரவேற்புக்கு உரியதாகும். அவ்வாறு இருவரும் செயல்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சேவைகளும் சிறப்பான முறையில் கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரின் உதவியுடன் சுமார் ரூ.30 கோடி மதிப்பீட்டில் என சுமார் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஒப்புதலுடன் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இன்றைய தினம் நடைபெறும் இலவச பன்னோக்கு மருத்துவ முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.

முன்னதாக, அமைச்சர் சாமிநாதன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இம்முகாமில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்வம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ,சென்னிமலை வட்டாட்சியர் பூபதி, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர், ரோட்டரி ஈரோடு சென்ட்ரல் சங்க நிர்வாகிகள், கமலநாதன், விக்னேஷ் குமார், ரோட்டரி இதயம் காப்போம் டிரஸ்ட் நிர்வாகிகள் சகாதேவன், திருநாவுக்கரசு, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 July 2023 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு