சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் புலி நடமாட்டம்

சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் புலி நடமாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் புலி நடமாட்டம்
X

வைரலாகும் புலி படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி நெய்தாளபுரம் பகுதியில் புலி ஒன்று விவசாய நிலத்தில் வலம் வரும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வழக்கம். அவ்வாறு வெளியேறிய புலி ஒன்றின் வீடியோ பதிவு தான் இது.

விவசாய நிலத்தில் புலி நடமாடும் காட்சி தாளவாடி என சந்தேகிக்கின்றோம். இது குறித்து உண்மைத் தகவல் கிடைத்தால் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்று வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் புகைப்படம் எடுக்க வேண்டும் என அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.

Updated On: 8 Aug 2021 1:00 PM GMT

Related News