நாய் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி

புஞ்சை புளியம்பட்டி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற போது, நாய் குறுக்கே சென்றதில் தொழிலாளி கீழே விழுந்து பலியானார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாய் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி
X

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). மில் தொழிலாளி. இவருடைய நண்பர் செங்குந்த புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 44). கடந்த 3 நாட்களுக்கு முன்பு, 2 பேரும் மோட்டார்சைக்கிளில் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து காவிலிபாளையத்துக்கு, உறவினர் ஒருவர் இறந்த துக்கம் விசாரிக்க சென்றனர்.

துக்கம் விசாரித்து விட்டு திரும்பும் வழியில், புஞ்சைபுளியம்பட்டி அருகே கோப்பம்பாளையம் அருகே வந்தபோது, நாய் குறுக்கே ஓடியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும், கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் இறந்தார். இதுகுறித்து, புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 13 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  இப்படி ஒரு ரெசிபி சாப்பிட்டிருக்கீங்களா..?
 2. நாமக்கல்
  நாமக்கல்லில் 24ம் தேதி மரவள்ளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்தும்...
 3. கல்வி
  நாளை குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் Corbevax இரண்டாம் தவணை...
 4. திருச்செங்கோடு
  நூல் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக கண்டுகொள்ளவில்லை: ஈஸ்வரன்...
 5. நாமக்கல்
  கோழிமுட்டை கழிவுகள் பொது இடத்தில் வீச்சு:: லாரி டிரைவருக்கு ரூ.20...
 6. அரியலூர்
  அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ...
 7. தேனி
  'வைட்டமின்-டி' குறைபாட்டால் எலும்பு வலிமை இழக்கும் மலைக்கிராம மக்கள்
 8. ஜெயங்கொண்டம்
  மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம்
 9. காஞ்சிபுரம்
  10 ஆண்டுகளாக நடக்கும் குவாரி மோசடிகள் -லாரி உரிமையாளர்கள் வேதனை
 10. தேனி
  25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சமூகஆர்வலர்