Begin typing your search above and press return to search.
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.350க்கு விற்பனை
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.350க்கு விற்பனையானது.
HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறும்.
அதன்படி நேற்று சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.
இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.245-க்கும், முல்லை ரூ.180 க்கும், காக்கடா ரூ.125-க்கும், செண்டுமல்லி ரூ.56-க்கும், பட் டுப்பூ ரூ.110-க்கும், ஜாதிமல்லி ரூ.250-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும், சம்பங்கி ரூ.15-க்கும், அரளி ரூ.140-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும் விற்பனையானது.