பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
X

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.39 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 209 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இன்று பாசனத்திற்காக 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 25 Jan 2021 12:00 PM GMT

Related News