/* */

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம்

ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று (திங்கட்கிழமை) நடந்தது.

HIGHLIGHTS

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம்
X

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று (திங்கட்கிழமை) நடந்தது.

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (ஏப்.15) காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவிலில் உள்ள சங்கமேஸ்வரர் சன்னதியில் உள்ள கொடிக்கம்பத்தில் நந்தி உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற கொடியேற்றப்பட்டது. பின்னர் சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, நாளை 16ம் தேதி ஆதிகேசவப் பெருமாள் சன்னதியில் கொடியேற்றமும், வருகிற 19ம் தேதி காலை ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடும் நடக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, 22ம் தேதி ஆதிகேசவ பெருமாள் தேர்த்திருவிழாவும், 23ம் தேதி சங்கமேஸ்வரர் தேர் திருவிழாவும் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

வரும் 24ம் தேதி மாலை பரிவேட்டை நிகழ்ச்சியும், சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், 25ம் தேதி தீர்த்தவாரியும், 26ம் தேதி நடராஜர் தரிசனம், மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவு பெறுகிறது. இவ்விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் மேற்கொண்டுள்ளார்.

Updated On: 15 April 2024 10:12 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?