/* */

பவானியில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு முதல்வர் ஆறுதல்

பவானியில் வெள்ள பாதிப்பு காரணமாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

பவானியில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு முதல்வர் ஆறுதல்
X

பவானி கந்தன்பட்டறை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜெயசுதா என்ற பெண்மணியிடம் முதல்வர் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார்.

காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரம் தண்ணீர் குடியிருப்புகளில் இருந்தவர்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முகாமில் உள்ளவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து செல்போன் மூலம் பேசினார்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானியில் கந்தன்பட்டறை நிவாரண முகாமில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள ஜெயசுதா என்ற பெண்ணிடம் முதல்வர் ஸ்டாலின் செல்போன் வாயிலாக பேசினார். அப்போது காவிரி ஆற்றில் வெள்ள பாதிப்பு குறைந்து வருவதால் நம்பிக்கையாக இருக்குமாறு ஆறுதல் கூறி நம்பிக்கை அளித்தார்.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முகாமில் வழங்கப்பட்டு வரும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். தொடர்ந்து வெள்ள பாதிப்பின் போது பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முகாமில் உள்ள பெண்ணிடம் திடீரென முதல்வர் ஸ்டாலின் செல்போன் மூலம் பேசி அனைவரையும் நலம் விசாரித்தது முகாமில் இருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 6 Aug 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...