/* */

ஆப்பக்கூடலில் தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆப்பக்கூடலில் தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
X

தொழுநோய் விழிப்புணர்வு பற்றிய நலக்கல்வி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைப்பட்டது.

ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது. இப்பேரணியை, ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையின் உப தலைவர் தொடங்கி வைத்தார். பேரணியில், தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சக்தி சுகர்ஸ் விஎம்கே கைலாசம் மருத்துவமனையில் தொடங்கிய பேரணி இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை கடந்து தன்னிலை சுகாதார இயக்க தொழுநோய் மருத்துவமனை வரை சென்றடைந்தது. இப்பேரணியில் டாக்டர் மகாலிங்கம் செவிலியர் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் 200 பேர் கலந்து கொண்டனர்.


இதனையடுத்து, தொழுநோய் மருத்துவமனையில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நலக்கல்வி வழங்கப்பட்டது. இதில் தொழுநோய் பற்றி அறிகுறிகள், தொழுநோய்க்கானசிகிச்சை முறைகள், தொழு நோயின் வகைகள், தொழுநோயினால் ஏற்படும் ஊனங்களை சரி செய்யும் சிறப்பு சிகிச்சைகள், ஊனத்தை சரி செய்யும் அறுவை சிகிச்சை முறைகள், தொழு நோயாளர்களுக்கு வழங்கப்படும் உதவி திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பவானி வட்டார மருத்துவ அலுவலர் விழிப்புணர்வு முகாமினை தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இதில் மாவட்ட நலக்கல்வியாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் இருந்து சிறப்புரை ஆற்றினார். வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் பற்றி எடுத்துரைத்தார்.


இறுதியாக ஸ்பர்ஷ் தொழு நோய் விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. தன்னிலை சுகாதார இயக்கம் தொழுநோய் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் நன்றியுரை வழங்கினார்.

இந்த தொழுநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாமில் சக்தி சர்க்கரை ஆலையின் உப தலைவர், தொழிலாளர் நல அலுவலர், சக்தி நகர் சுழற்சி சங்கத்தின் தலைவர், உறுப்பினர்கள் பவானி வட்டார மருத்துவ அலுவலர், நலக்கல்வியாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், ஈரோடு, வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Jan 2024 1:45 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  5. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  6. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  7. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  8. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  9. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  10. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!