/* */

அம்மாபேட்டையில் 10 அடி நீள மலைபாம்பய் பிடித்த பொதுமக்கள்

அம்மாபேட்டை பகுதியில் ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்கள் லாவகமாக பிடித்தனர்.

HIGHLIGHTS

அம்மாபேட்டையில் 10 அடி நீள மலைபாம்பய் பிடித்த பொதுமக்கள்
X

அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் பந்தல்கரடு பகுதியில் அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். ரோட்டில் வெளிச்சம் இல்லாததால் டார்ச் லைட் அடித்தபடி அந்த வெளிச்சத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது ரோட்டில் ஏதோ நெளிந்து செல்வது போல இருந்தது. உடனே டார்ச் லைட் அடித்து பார்த்த போது மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்தபடி சென்று கொண்டு இருந்தது. இதனை கண்டு பயந்து போன அவர்கள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டதும் அந்தப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலரும் ஓடி வந்தனர். உடனே அவர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த மலைப்பாம்பை வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு 10 அடி நீளம் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு சென்னம்பட்டியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

Updated On: 8 Oct 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது