/* */

கோபிசெட்டிபாளையம் நகராட்சி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் நகராட்சி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
X

கோபிசெட்டிபாளையம் நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த மொடச்சூரில் தனியார் மண்டபத்தில் கோபி நகர அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று அதிமுக தலைமை கழகம் கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தது. இதனையடுத்து, கோபி நகராட்சியில் 30 வார்டுகளிலும் உள்ள வேட்பாளர்களை முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, பேசிய எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கோபி நகராட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தியதாகவும், மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை எடுத்து கூறி பணியாற்றினால் வெற்றி பெற முடியும் என கூறினார். இந்த கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமணீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Feb 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?